ஒடிசா ஜூலை, 3
ஒடிசாவில் ₹30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான செமி கண்டக்டர் ஆலையை பிரிட்டனின் SRAM & MRAM டெக்னாலஜிஸ் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஞ்சம் மாவட்டத்தின் கோபால்புரில் தனது உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆலை மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் 2027 ம் ஆண்டிற்குள் இந்த ஆலையில் 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்யப்பட உள்ளதாக அறிய முடிகிறது.