புதுடெல்லி ஜூலை, 3
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மறு சீரமைப்பு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய அமைச்சரவையில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சியினரும் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக அறிய முடிகிறது. இன்னும் சில மாதங்களில் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் சிந்தித்து பாரதிய ஜனதா கட்சி மேலிடம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.