மதுரை ஜூலை, 2
நடிகர் விஜய்யோடு சேர்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகளை காலி செய்வேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரையில் பேசிய அவர், விஜய் அரசியலுக்கு வருவதால், திமுக – அதிமுகவிற்கு ஆபத்து இல்லை; எனக்கு தான் ஆபத்து என புரளி கிளப்பி விடுகின்றனர். நானும், தம்பி விஜய்யும் ஒரு போதும் அடித்துக் கொண்டதில்லை 2024 தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 இடங்களில் தனித்துப் போட்டியிடும் என்றார்.