புதுடெல்லி ஜூன், 29
பிரகதி டிஜிட்டல் திட்டத்தின் கீழ் மதுரை எய்ம்ஸ் திட்டப்பணிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசின் திட்ட செயல்பாடுகளை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் மோடி மதுரை ராஜ்கோட், ஜம்மு போன்ற இடங்களில் அமையும் எய்ம்ஸ் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து மேற்படி திட்டங்களை தீட்டி காலைக்கெடு நிர்ணயித்த அவற்றை முடிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.