புதுடில்லி ஜூன், 29
உலக கோப்பையை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைக்கப்பட்டது. ஜூன் 27 அன்று ஆமதாபாத் மோடி மைதானத்தில் தரையிறக்கப்பட்டது.
இங்கிலாந்தில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ‘ஸ்டிராட்டோஸ்பியரிக் பலுான்’ மூலம் நேற்று உலக கோப்பை விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து 1,20,000 அடி உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. உறைபனிக்கும் கீழான, மைனஸ் 65 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், பூமியின் வெளிவட்டப் பாதைக்கு 99.5% அருகில் ஜொலிக்கிறது.
உலக கோப்பை இருக்கும் இடத்தை ‘4டி’ தொழில்நுட்ப கேமரா உதவியால் படம் பிடிக்கப்பட்டது. உலக கோப்பை துவங்க இன்னும் 100 நாள் உள்ள நிலையில், உலகின் பெரிய மோடி மைதானத்தில், பலுான் தரையிறக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து குவைத், பஹ்ரைன், மலேசியா, அமெரிக்கா, நைஜீரியா, பிரான்ஸ், இத்தாலி உட்பட 18 நாடுகளில், 40க்கும் அதிகமான நகரங்களுக்கு உலக கோப்பை கொண்டு செல்லப்பட உள்ளது.