சென்னை ஜூன், 29
தமிழ்நாட்டில் ஹஜ் பெருநாள் எனும் பக்ரீத் பண்டிகை ஜூன் 29ம் தேதி கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லும் மாணவர்கள் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் திரும்ப ஏதுவாக நாளை ஜூன் 30-ம் தேதியும் அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.