சென்னை ஜூன், 29
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள டிமான்டி காலனி 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு திட்டமிட்டபடி 61 நாட்களில் ஓசூர், சென்னை மற்றும் ஆந்திரா மாநில எல்லை ஆகிய இடங்களில் நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது.