சென்னை ஜூன், 29
வெளி சந்தையில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்வது நீடித்தால் தமிழகத்தில் உள்ள 35,000 ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிர் இடுவது கணிசமாக குறைந்தது. இதனால் கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்துள்ளது என்றார்.