சண்டிகர் ஜூன், 27
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சண்டிகர் -மணாலி நெடுஞ்சாலையில் மண்டி-குலு இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை மூடப்பட்டது. இந்தச் சூழலில், அந்தச் சாலையில் சுமார் 20 மணி நேரமாக நீடித்து வந்த போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வந்து, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.