சென்னை ஜூன், 26
இந்தியாவில் ஏசிகள் பயன்பாடு அதிகரிப்பால், 2050 ஆம் ஆண்டுக்குள் சராசரியாக ஆண்டுக்கு 12 கோடி டன் கார்பன் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சர்வே முடிவு ஒன்று எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏசிகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் 3.8 கோடி டன்களிருந்து 16 கோடி டன்களாக கார்பன் வெளியேற்றம், அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.