சென்னை ஜூன், 25
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான வீரன் படம் வரும் 30-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகிறது. மரகத நாணயம் படத்தை இயக்கிய ஆர்கே சரவணன் இப்படத்தை இயக்கியிருந்தார். ஜூன் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படத்தில் ஆதிரா ராஜ் வினய், முனிஸ்காந்த் ஆகியோர் நடித்திருந்தனர். கிராமத்து சீப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.