அமெரிக்கா ஜூன், 25
உலகிலேயே மிகப் பழமையான மொழி தமிழ் என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வாழ் தமிழர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த மோடி அமெரிக்கா ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.