தென்னாப்பிரிக்கா ஜூன், 25
தென்னாபிரிக்காவில் தங்க சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவில் ஏராளமான தங்க சுரங்கங்களை அந்நாட்டு அரசாங்கம் மூடி வருகிறது. இந்நிலையில் பிரீஸ்டேட் மாகாணத்தில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 31 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டிய போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.