அமெரிக்கா ஜூன், 19
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இல்லினாய்ஸில் உள்ள வில்லோபுரூக்கில் கொண்டாட்டத்தின் போது அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தியது யார் என்று தெரியவில்லை. காயமடைந்தவர்களில் இரண்டு பேரில் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.