திருச்சி ஜூன், 18
திருச்சி லால்குடியில் அதிக அளவு மது குடித்ததால் இரண்டு பேர் பலியானதாக அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் கூறியுள்ளார். தச்சங்குறிச்சியில் முனியாண்டி, சிவகுமார் ஆகியோர் டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்ததை தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில் இருவர் உடலில் விஷம் எதுவும் இல்லை என்றும் உணவு ஏதும் உண்ணாமல் அதிக அளவில் மது குடித்ததால் இருவரும் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.