பிஜி ஜூன், 16
தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவு அருகே நேற்று நள்ளிரவு 11:36 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிப்பேர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக கருதப்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.