கர்நாடகா ஜூன், 16
ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி ஹெட்கேவாரின் பாடத்தை பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து கர்நாடகா அரசு நீக்கி உள்ளது. கடந்த அரசு பாடத்திட்டத்தில் செய்த மாற்றங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு பழைய பாடத்திட்டமே தொடரும் என அமைச்சர் மது பங்காரப்பா அறிவித்தார். அதேபோல இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை அனைத்து பள்ளி மாணவர்களும் படிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.