சென்னை ஜூன், 14
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சுப்ரமணியம், வேலு, சேகர் பாபு உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். இதன்பின் அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.