குஜராத் ஜூன், 12
அரபிக்கடலில் நிலவி வரும் பைபர்ஜாய் அதி தீவிர புயலாக வலுப்பெற்று வரும் 15ம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் மாண்டிவி மற்றும் பாகிஸ்தான் கராச்சி கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் பாகிஸ்தானில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சுமார் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.