அகமதாபாத் மே, 29
மழை காரணமாக நேற்று தடைபட்ட ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று அகமதாபாத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் குறைவு எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று போலவே மழை பெய்து இன்றும் போட்டி நடைபெறாமல் போனால் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் GT க்கு கோப்பை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து வருணபகவான் கருணை காட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.