புதுடெல்லி மே, 21
பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு இந்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த 22 பாகிஸ்தான் கைதிகள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதிகள் அனைவரும் வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்பட்டனர். உரிய ஆவணங்கள் இல்லாத அவர்களுக்கு இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அவசரப் பயண சான்றிதழ் வழங்கி அனுப்பி வைத்தது.