விருதுநகர் மே, 18
விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியை சேர்ந்த முத்தமிழ் செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார். இந்த சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்றி பெற முத்தமிழ் செல்விக்கு முதல்வர் மு.க ஸ்டாலின், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டில் முதல் பெண்மணி என்ற பெயரை பெற்றிட வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பயணம் முடிந்த பின் தன்னை நேரில் வந்து சந்திக்க முத்தமிழ் செல்விக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.