கீழக்கரை மே, 18
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெருகி வரும் வாகனத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ,மாணவியர் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்தி “நமது KLK வெல்ஃபேர் கமிட்டி” சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அதன் தொடர்ச்சியாக நான்கு சுற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான டூ வீலர் மற்றும் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்தும் வகையில் முக்குரோட்டில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை ரோட்டின் இரண்டு பக்கமும் ஒன்சைடு பார்க்கிங் செய்யும் அடையாளத்தை நேற்று(17.05.2023) துவக்கி வைத்தனர்.
வலதுபுறம்,இடதுபுறமென 100 மீட்டர் இடைவெளியில் கயிறு பதிக்கப்பட்டு டூ வீலர் ஆட்டோக்களை கயிற்றின் உள்பகுதிக்குள் மட்டுமே பார்க்கிங் செய்ய வேண்டுமென மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். கயிற்றுக்கு வெளியில் நிறுத்தும் வாகனங்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதிப்பார்கள் என்பதையும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் ஒருபக்க வாகன நிறுத்தத்திற்கான கயிறு பதிக்கும் வேலையை கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. இதில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா,துணைதலைவர் ஹமீது சுல்தான், கவுன்சிலர்கள், காவல்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், நமது KLK வெல்ஃபேர் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்/தாலுகா நிருபர்
கீழக்கரை.