புதுடெல்லி மே, 17
வோடபோன் நிறுவனம் வரும் மூன்று ஆண்டுகளில் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க்கெரிதா டெல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், எங்களின் செயல் திறன் போதுமானதாக இல்லை. நிறுவனத்தை எளிமைப்படுத்தவும், வளர்ச்சி பாதை கொண்டு செல்லவும் முக்கியத்துவம் வழங்கப்படும் இதற்கு தடையாக உள்ள சிக்கல்கள் அகற்றப்படும் என்று கூறியுள்ளார்.