சென்னை மே, 17
தமிழ்நாட்டில் 16 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 32 ஐஏஎஸ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் மாற்றி உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு. சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐஏஎஸ் மாற்றத்தின் போது முதல்வரின் தனி செயலர், சென்னை மாநகர ஆணையர், ஆகியோர் மாற்றப்பட்டனர். இந்நிலையில் தற்போது நாகை, கடலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
