கீழக்கரை மே, 16
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முக்குரோட்டில் ராமநாதபுரம் செல்லும் சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி உரிய நிதி ஒதுக்கீடு செய்து நிழற்குடை பணிகளும் நிறைவு பெற்றுள்ளன.
கீழக்கரை மார்க்கம் வழியாக ராமநாதபுரம் செல்லும் பேரூந்துகள் இந்த நிழற்குடை நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டுமென்பதற்காக கட்டி முடிக்கப்பட்டும் இதுநாள் வரை மக்களின் பயன்பாட்டிற்கு வராதது ஏன்?என்னும் கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பாராளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை மேற்கொள்வாரா என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜஹாங்கீர்/தாலுகா நிருபர்
கீழக்கரை.