புதுடெல்லி மே, 19
மத்திய அரசின் திட்ட குழுவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சி மன்ற குழு கூட்டம் வரும் மே 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களும் கலந்து கொள்ள உள்ளனர். மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.