புதுடெல்லி மே, 17
பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா, நியூ ஜெனிவா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மே 19 முதல் 24 வரை பயணம் செய்ய உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அவர் ஜி 7 கூட்டம், FIPIC மூன்றாவது மாநாடு மற்றும் குவாட் கூட்டங்களில் பங்கேற்கிறார். இந்த பயணத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை, மோடி சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.