குஜராத் மே, 15
குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கட்டார் கிராமத்தில் இரண்டு வயது ஆண் குழந்தை தனது தாய் தந்தையுடன் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது குடிசைக்குள் புகுந்த சிறுத்தை குழந்தையின் கழுத்தை கடித்து இழுத்து சென்றது. இதைப் பார்த்து பதறிப் போன குழந்தையின் பெற்றோர் கூச்சலிடவே சிறுத்தை குழந்தையை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடி விட்டது. ஆனால் அந்த குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.