கன்னியாகுமரி மே, 15
குமரி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ரோந்து பணிகளை அதிகரிக்க காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்திற்கு இடமாக கடலில் செல்லும் படகுகளை சோதனையிடவும், கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப் படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். கொச்சி அருகே 2500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரோந்து படகுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.