கீழக்கரை மே, 15
ராமநாதபுரம் மாவட்டம் அரசு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு உள் நோயாளிகள் பயன்பாட்டிற்கு, இஸ்லாமிய கல்வி நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டில், மெத்தை உள்ளிட்ட உபகரணங்களை தலைமை மறுத்தவர் ஜவாஹீர் உசைனிடம் இஸ்லாமிய பள்ளியின் தாளாளர் முகைதீன் இப்ராஹீம் வழங்கினார். பள்ளியின் கணக்காளர் மலைச்சாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.