சென்னை மே, 15
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தந்த அழுத்தம் காரணமாகவே அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இலாக்கா மாற்றப்பட்டதாக பேசப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகள் ஆட்சியை தொடர இணக்கமாக சூழ்நிலை வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசின் அதிருப்தி பட்டியலில் உள்ள பி டி ஆரின் இலாக்கா மாற்றப்பட்டது என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. சமீபத்தில் டெல்லி சென்ற ஸ்டாலின் நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.