நெல்லை ஆகஸ்ட், 15
இந்தியாவின் சுதந்திர தின அமுத பெருவிழா வினை முன்னிட்டு கூடன் குளம் கூடங்குளம் அணுமின்நிலைய இயக்குநர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.
கூடன் குளம் அணு உலை வளாகம் சார்பில் நாட்டின் 75 வது சுதந்திர தின அமுத பெரு விழா செட்டிக்குளம் அணு விஜய் நகரில் வளாக இயக்குநர் பிரேம் குமார் தேசிய கொடியினை ஏற்றினார்.
பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படை யினர் மற்றும் என் சி.சி மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் தனது சுதந்திர உரையில் நாட்டின் 75 வது சுதந்திர தின அமுத பெரு விழாவினை முன்னிட்டு சுதந்திரத்திற்கு பாடு பட்ட மகாத்மா காந்தி ஜவஹர்லால் நேரு டாக்டர் அம்பேத் கார் மற்றும் தனது இன்னுயிர் நீத்த தியாகிகளின் தியாகத்தினை இந்த நன்னாளில் நினைவு கூர்ந்து நாட்டின் முனேற்றத்திற்கு சீரிய வழியில் உழைக்க சபதமேற்போம்.
மேலும் கூடன் குளத்தில் அணு உலை துவங்கிய வருடத்திலிருந்தே நாடுவளர்ச்சி நிலையை எட்டியுள்ளது கடந்த நிதி ஆண்டில்மட்டும் 83 சதவீதம் உலை மின் திறனை உற்பத்தி செய்துள்ளது. இது வரலாற்று சாதனையாகும். 2021 ஆகஸ்ட் 29 முதல் 2022 ஜூலை 24 வரை 126 நாட்கள் முதலாவது அணு உலை தொடர்ச்சியாக செயல்பட்டது. கடந்த நிதி ஆண்டில் அணு சக்தி மின்சாரம் மூலம் சுமார் 6500 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதே போன்று 5 மற்றும் 6 வது அணு உலை பணிகள் ஏற்கனவே துவக்கப்பட்டு 62 சதவீதபணிகள் முடிவடைந்துள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் அணு உலை இயக்குநர்கள் சுரேஷ், சின்ன வீரன், ரஷ்யா குழு, யுவான் சோபிவன் ஷாவந்த் மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் ஜிதேந்திர பாபு கண் காணிப்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.