பாலஸ்தீனம் மே, 14
பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த சூழலில், சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில், காசாவில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய ஆயுதக் குழுவின் மூத்த தளபதிகள் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இதனால் இரு தரப்பு மோதல் வெடித்தது. இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக நடந்து வந்த மோதலுக்கு பிறகு தற்போது பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.