புதுடெல்லி மே, 13
டெல்லி முதல்வருக்கு கெஜ்ரிவாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார் கமலஹாசன். டெல்லியில் ஆளுநரை விட அரசுக்கே முழு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை வரவேற்ற கமலஹாசன் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன். கெஜ்ரிவாலின் நீண்ட போராட்டத்திற்கு பலன் கிடைத்தது. டெல்லி குடிமக்களுக்கு சேவை செய்வதில் கெஜ்ரிவால் சிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.