சென்னை மே, 13
சிறந்த கதைக்களம் கொண்ட படம் தான் ஃபர்ஹானா என இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், என்னுடைய வாழ்நாளில் நான் கேட்ட சிறந்த கதைகளில் ஒன்று. இதனை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் அழகாக மாற்றியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் அழகு படுத்தி உள்ளார். இது போன்ற காவியப் படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.