சென்னை மே, 13
முதலமைச்சரும், திமுக தலைவர் ஆன ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க அதிக வாய்ப்பு உள்ளதால் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.