திண்டுக்கல் மே, 10
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுவில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினிக்கு தங்க பேனாவை கவிஞர் வைரமுத்து பரிசாக அளிக்க உள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர், தச்சுத் தொழிலாளியின் மகள் மாநிலத் தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெண் குலத்தின் பெருமை. இதனால் அவரை பாராட்டும் விதமாக அண்மையில் நான் பெற்ற தங்க பேனாவை திண்டுக்கல்லுக்கு நேரில் சென்று பரிசாக தருவேன் என குறிப்பிட்டுள்ளார்.