சென்னை மே, 9
பொதுவாக ஒருவர் காலமானால் அவர்கள் உடைகள் எரிக்கப்படுவது வழக்கம். ஆனால் நடிகர் மனோபாலாவின் மனைவி உஷா அப்படி செய்யாமல் மிகப்பெரிய உதவி செய்துள்ளார். மனோபாலாவின் வாட்ச் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு அவரின் அனைத்து உடைகளையும் அனாதை இல்லத்திற்கு கொடுத்துள்ளார். மனோ பொதுவாக உதவும் தன்மை கொண்டவர் என்பதால் இறந்த பின்னும் அவர் மற்றவர்களுக்காக உதவியுள்ளார் என்பதற்காகவே உஷா இப்படி செய்துள்ளாராம்.