கடலூர் மே, 9
அமைச்சர் பொன்முடியின் கார் மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கடலூரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் விழுப்புரம் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தின் மீது அமைச்சரின் கார் மோதியது. அடிபட்ட அந்த நபர் அமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.