கீழக்கரை மே, 8
தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுதேர்வின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பள்ளிகளின் தேர்ச்சி விபரங்கள் குறித்த தகவலை நமது செய்தியாளர் தொகுத்து வழங்கிய விபரங்கள் பின்வருமாறு:-
ஹமீதியா மெட்ரிக் பள்ளி 591மதிப்பெண்ணும், ஃபேர்ல் மெட்ரிக் பள்ளி 590 மதிபெண்ணும், ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி 581 மதிப்பெணும் எடுத்துள்ளன.
தேர்வு எழுதிய மக்தூமியா மேல்நிலைப்பள்ளி,ஹமீதியா மெட்ரிக் பள்ளி, தீனியா மெட்ரிக் பள்ளி,முகைதீனியா மெட்ரிக் பள்ளி,இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி,ஃபேர்ல் மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்று 100% விழுக்காடு தேர்ச்சி பெற்ற பள்ளிகளாக திகழ்கின்றன.
மேலும் 98.5% தேர்ச்சி பெற்ற ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி முகம்மது பாத்திமா சுகைனா வணிகவியல்,கணக்கு பதிவியல், கணினிபயன்பாடு உள்ளிட்ட மூன்று பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து மூன்று பாடத்தில் சென்டம் எடுத்த மாணவி என பெயர் வாங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து முகைதீனியா மெட்ரிக் பள்ளி மாணவி ஹபீப் சானியா வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் ஒன்பது மாணவ,மாணவியர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் ஆறு பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
வெற்றி பெற்ற அனைத்து பள்ளி மாணவ,மாணவியருக்கும் நமது வணக்கம் பாரதம் இதழ் சார்பில் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்!
ஜஹாங்கீர்/தாலுகா நிருபர்
கீழக்கரை.