சென்னை மே, 9
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் அடுத்த கட்டமாக கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் ஐந்து ஆண்டு சட்டப் படிப்புகளில் சேர மாணவர்கள் மே 15 முதல் 31 வரை இணையவளையில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3 ஆண்டு சட்டப் படிப்புகள் மற்றும் முதுநிலை சட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.