சென்னை மே, 7
10 th, +2 மாணவர்களின் பொதுத் தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வு முடிவுக்கு பின் உயர்கல்வியில் சேர்வதற்கு ஆலோசனை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில் எந்த கல்லூரியில் சேர்வது, எந்த படிப்பில் சேரலாம், உயர்கல்வி கடன் எப்படி பெறுவது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.