பிரிட்டன் மே, 7
பிரிட்டனின் மன்னராக மூன்றாம் சார்லஸ் நேற்று முடி சூட்டப்பட்டார். இந்நிலையில் மன்னராக அவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாருக்கும் ஆட்டோகிராப் கையெழுத்தோ, செல்பிக்கோ போஸ் கொடுக்கக் கூடாது. வெளி நபர்களிடமிருந்து உணவு உண்ணக்கூடாது. அனைத்து பரிசுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசியலில் நடுநிலையோடு அரசு உணவையும் பின்பற்ற வேண்டும். இளவரசர் வில்லியம்ஸ் உடன் இணைந்து பயணிக்க கூடாது போன்ற விதிமுறைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளன.