சென்னை மே, 7
அரசின் அறிவுறுத்தலின்படி போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகளை முடக்கும் பணியில் சைபர் கிரைம் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் போலியான ஆவணங்கள் மூலம் 52 ஆயிரம் சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றை முடக்க மத்திய தொலைதொடர்பு துறைக்கு சைபர் க்ரைம் காவல்துறையினர் கடிதம் எழுதி உள்ளனர். இது தொடர்பாக 1,102 விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.