ஏர்வாடி மே, 7
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மாவட்ட அரசு காஜி VVA.சலாஹுதீன் ஆலிம் மகனார் அஹமது அப்துல் காதர் சுஐபு மணமகனுக்கும் ஏர்வாடி நகர் முஸ்லிம்லீக் தலைவர் நவ்பாதுஷா ஆலிம் மகளார் செய்யதலி பாத்திமா பெண்ணுக்கும் இன்று(07.05.2023) காலை ஏர்வாடி புதுபள்ளியில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தேசிய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் காதர்முகைதீன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, தமிழக வக்ஃபு வாரிய தலைவர் அப்துல்ரகுமான், டாக்டர் அப்சர்ஹுசைன், கரூர் மாவட்ட அரசு காஜி சிந்தாமணிபட்டி மௌலானா சிராஜுதீன் ஆலிம், கீழக்கரை நமது KLK வெல்ஃபேர் கமிட்டி தலைவர் மௌலானா சாகுல்ஹமீது பாக்கவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர்/தாலுகா நிருபர்
கீழக்கரை.