சென்னை மே, 8
தமிழகத்தில் பணவீக்கம் குறைந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். திமுகவின் 2 ஆண்டு கால சாதனை பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் பணவீக்கம் அதிகரித்த போதிலும், தமிழகத்தில் பணவீக்கம் குறைந்து வாங்கும் திறன் அதிகரித்து உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளது என்றார். மேலும் திமுக தான் இனி தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் பாராட்டும் அளவிற்கு இரண்டு ஆண்டில் சாதனை படைத்திருப்பதாக அவர் கூறினார்.