ராமநாதபுரம் மே, 7
ராமநாதபுரம் சதக் பப்ளிக் பள்ளி, வேலு மாணிக்கம் கல்லூரி உள்ளிட்ட ஐந்து தேர்வு மையங்களில் 2003 பேர் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் உரிய பரிசோதனைக்கு உட்படுத்த பின்னர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட இருப்பதாகவும், தேர்வு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள இரண்டு பறக்கும் படை குழுவினர் மற்றும் 100 தேர்வு மைய கண்காணிப்பு அலுவலர்கள் தயாராக இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் தெரிவித்துள்ளார்.