சென்னை மே, 2
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி வரும் 7ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மூன்றாம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் இன்று மாலை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைச்சர்களாக இருந்து சரியாக செயல்படாதவர்களை நீக்கவும், புதியவர்களுக்கு அமைச்சரவையில் இடம் தருவது குறித்தும் ஸ்டாலின் முக்கிய முடிவு எடுக்க உள்ளார்.