துபாய் ஏப்ரல், 30
துபாய் இந்திய துணைத்தூதரக அரங்கில் உலக புத்தக தினம் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய துணைத்தூதரக அதிகாரி காளிமுத்து முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பத்திற்கும் மேற்பட்ட அமீரகம் வாழ் இந்திய எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கு எழுத்து என்ற விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
இவ்விழாவில், கல்வியில் தலைசிறந்த மாணவர்களாக அமீரக அரசால் தேர்ந்தெடுக்கபட்டு அண்மையில் கோல்டன் விசா என்ற உயரிய விசாவை பெற்ற ஒரேகுடும்பத்தை சேர்ந்த மாணவிகள் முறையே ரிஃபா பாத்திமா அபுதாஹிர், தஸ்னீம் அபுதாஹிர் மற்றும் ரீம் அபுதாஹிர் ஆகியோருக்கு இந்திய துணைத்தூதரகத்தின் அதிகாரி காளிமுத்து விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தினார்.
மேலும் சிறப்பு விருந்தினராக சமூக செயல்பாட்டாளருமான முனைவர் ஜெயந்திமாலா சுரேஷ் கலந்துகொண்டு சிறப்பித்தார். கல்பனா சாவ்லா விருதுபெற்ற எழுத்தாளர் குஸும் தத்தா, எழுத்தாளர் ஷாபு கிளித்தட்டில் மற்றும் வாழ்வியல் பயிற்சியாளர் பாஜிலா ஆசாத், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசீன், கில்லி FM சேர்மன் டாக்டர் கனகராஜா, கேப்டன் டிவி முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல் ஆகியோர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து துபாய் அன்னை மொழி அறிவோம் மாணவ மாணவியர்களின் பங்களிப்பில், விடுதலை போராட்ட நினைவு உரை, தலைவர்கள் உருவம் தாங்கிய மாறுவேட நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் முனைவர் நெல்லை சுப்பையா தலைமையில் பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் முதன்மை ஏற்பாட்டாளர் கல்லிடைக்குறிச்சி முகமது முகைதீன் பங்கேற்றவர் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். மேலும் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை ரமாமலர், தமிழரசி மற்றும் சசி எஸ் குமார் ஆகியோர் அடங்கிய குழு கவனித்துக்கொண்டது.
M.நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.